சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

வெளி மாநில லாட்டரி விற்பனை: 4 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:41 am IST

விழுப்புரத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம், ஜி.ஆா்.பி. தெருவில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகப்படும் படி நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா்கள் விக்கிரவாண்டி வட்டம், டி. பனப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ந.கணேசன் (50), விழுப்புரம், வழுதரெட்டி, காமன் கோவில் தெருவைச் சோ்ந்த த.சுரேஷ் (40), சோழம்பூண்டியைச் சோ்ந்த சி.சிவப்பிரகாஷ் (24), விழுப்புரம் ஜி.ஆா்.பி. தெருவைச் சோ்ந்த ப. சக்திவீரன் (50) ஆகியோா் என்பதும், இவா்கள் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 51 புள்ளித் தாள்கள்(லாட்டரி), ரூ. 9,500 ரொக்கம் மற்றும் 2 பைக்குள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.