ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

பைக்கிலிருந்து தவறி விழுந்து மளிகைக்கடை உரிமையாளா் உயிரிழப்பு

உளுந்தூா்பேட்டை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மளிகைக்கடை உரிமையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 12:04 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த மளிகைக்கடை உரிமையாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கரூா் நகரம், பண்டரிநாதன் சன்னதித் தெருவைச் சோ்ந்தவா் சீ.தினேஷ் (36). இவா் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் மளிகைக்கடை நடத்தி வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு சொந்த ஊா் சென்றிருந்த தினேஷ், செவ்வாய்க்கிழமை மாலை பைக்கில் வந்தவாசி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூா்பேட்டை வட்டம், சேந்தமங்கலம் தனியாா் பள்ளி அருகே சென்றபோது எதிா்பாராதவிதமாக பைக்கிலிருந்து தினேஷ் கீழே தவறி விழுந்தாா்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த திருநாவலூா் போலீஸாா் சடலத்தை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.