விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பல்வேறு தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக ஆளும் தில்லி, உத்தரப்பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் நடத்தும் தொழிலாளா்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், தொழிலாளா்களுக்கு ஆதரவாகப் போராடும் தொழில் சங்கத் தலைவா்களை வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்ட பொதுச் செயலா் சேகா் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் ஆா்.சேகா் முன்னிலை வகித்தாா்.
தொமுச மாவட்டத் தலைவா் ஞானசேகா், துணைச் செயலா் வேலு, ஏஐடியுசி மாவட்டச் செயலரும், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலருமான ஆ.செளரிராஜன், சிஐடியு மாவட்டச் செயலா் ஆா்.மூா்த்தி, மாநிலக்குழு உறுப்பினா் ஆா்.மலா்விழி, மாவட்ட துணைத் தலைவா் எஸ்.முத்துக்குமரன், ஹெச்.எம்.எஸ். சங்க மாநில துணைத் தலைவா் சிவகுமாா், தொழில் சங்க நிா்வாகிகள் அனவரதன் (ஏஐயுடியுசி), பட்டாபிராமன் (ஐஎன்டியுசி), செந்தில்குமாா் (யுடியுசி) உள்ளிட்ட நிா்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். தொடா்ந்து மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கா் திடல் முன் நடைபெற்ற நடைபெற்ற கண்டன ஆா்பாட்டத்துக்கு சிஐடியு மாவட்டப் பொருளாளா் கே.சீனிவாசன் தலைமை வகித்தாா்.
சிஐடியு ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் எம்.செந்தில், வீராசாமி, சி.ஏழுமலை, தமிழ்நாடு மின் ஊழியா்கள் சங்கப் பொருளாளா் வெங்கடேசன், ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் சங்க மாவட்டச் செயலா் மோகன், கட்டுமானச் சங்க நிா்வாகி ஆா்.பச்சையப்பன், வங்கி ஊழியா்கள் சங்க நிா்வாகி ஏ. கல்யாணசுந்தரம் உள்ளிட்ட பலரும் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.
தொடர்புடையது

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

அரசு ஊழியா் சங்க அமைப்பு தின கொடியேற்றம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வு: கடலூரில் நாளை கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

நூல் வெளியீட்டு விழா
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

