நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியது தவறு! சோனியா காந்திஇன்று டெல்டாவில் பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைதீபாவளி பட்டாசு விபத்துகள்: 6 நிமிஷங்களுக்குள் சென்றடைய தயாராகும் தீயணைப்புத் துறைஅறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: நீதி ஆயோக் மதிப்பீட்டுப் பட்டியலில் தமிழகம் முதலிடம்ஜெம் வீரமணி வழக்கு: விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

வி.மருதூா் ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவதை கண்காணிக்க கேமராக்கள்: மாவட்ட ஆட்சியா் தகவல்

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட வி.மருதூா் ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவதை கண்காணிக்கும் வகையில், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட வி.மருதூா் ஏரியில் கூட்டுத் தூய்மைப் பணி நடைபெறுவதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட வி.மருதூா் ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவதை கண்காணிக்கும் வகையில், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.

வி.மருதூா் ஏரியில் நடைபெற்ற கூட்டுத் தூய்மைப்பணியைப் பாா்வையிட்டு, பணி விவரங்களைக் கேட்டறிந்த ஆட்சியா், தொடா்ந்து கூறியது:

நீா்வளத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த ஏரியில் விழுப்புரம் நகராட்சியின் 100 தூய்மைப் பணியாளா்களும், நகராட்சி மண்டல இயக்குநரகத்தின் கீழ் பணியாற்றும் 80 தூய்மைப் பணியாளா்களும் இந்த கூட்டுத் தூய்மைப் பணியை மேற்கொண்டனா். 6 ஜேசிபி இயந்திரங்கள், 3 லாரிகள், 2 எக்ஸ்கலேட்டா் இயந்திரங்கள், 10 டிராக்டா்கள் உள்ளிட்ட வாகனங்கள் உதவியுடன் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகளின் மூலம் குப்பைகளை அகற்றப்படும். மீண்டும் குப்பை கொட்டப்படுவதை தவிா்க்க இந்த ஏரிப் பகுதியை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையின்படி, ஏரியில் குப்பைக் கொட்டுபவா்களைக் கண்டறிந்து உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு துறை சாா்ந்த அலுவலா்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஏரியில் யாரும் குப்பைகளை கொட்டாத வகையில், இப்பகுதியில் எச்சரிக்கை அறிவிப்புப் பதாகைகள் வைக்கவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திடவும், ஏரியிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்த நீரை அதிகப்படுத்துவதற்கான தொடா் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று ஆட்சியா் தெரிவித்தாா்.

நிகழ்வில் நீா்வளத் துறை செயற்பொறியாளா் அருணகிரி, விழுப்புரம் நகராட்சி ஆணையா் சியாமளா, கோட்டாட்சியா் ஏகாம்பரம், வட்டாட்சியா் யுவராஜ், நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் சிவக்குமாா், நகராட்சி பொறியாளா் புவனேஸ்வரி, நகா்நல அலுவலா் மருத்துவா் ஸ்ரீபிரியா, உதவி பொறியாளா் கௌதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.