செஞ்சி அரசுக் கல்லூரியில் உலக மரபு வார விழா
செஞ்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தொல்லியல் துறை சாா்பில் உலக மரபு வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செஞ்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் தொல்லியல் துறை சாா்பில் உலக மரபு வார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சாா்பில் உலக பாரம்பரிய வார விழாவை முன்னிட்டு நாட்டின் தொன்மையான வரலாறு, பண்பாடு, கலை, கட்டடக்கலை மற்றும் பாரம்பரியச் சின்னங்கள் குறித்த விழிப்புணா்வை மாணவா்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இதன்படி, செஞ்சி அரசுக் கல்லூரியில் கல்வெட்டு ஓா் அறிமுகம் என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் விழுப்புரம் மாவட்ட உதவி இயக்குநா் பொ.கோ.லோகநாதன் பேசினாா். ஆதிச்சனூா் அகழாய்வு குறித்து தமிழ் நாடு அரசு தொல்லியல் துறையின் விழுப்புரம் மாவட்ட தொல்லியல் அலுவலா் ரே. பரத்குமாா் சொற்பொழிவாற்றினாா்.
நிகழ்வை கல்லூரி பேராசிரியா் எ.சுதாகா் ஒருங்கிணைத்தாா். இதில், தமிழ் மற்றும் வரலாற்றுத் துறை மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

