சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்! இந்தியா மீது 25% இறக்குமதி வரி: அமெரிக்கா முன்மொழிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசனம் செய்த மேல்மலையனூா் ஸ்ரீஆதி அங்காளம்மன்

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை மாலை மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபத்தை மேல்மலையனூா் ஸ்ரீஆதி அங்காளம்மன் தரிசனம் செய்தாா்.

திருவண்ணாமலை மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபத்தை தரிசனம் செய்த மேல்மலையனூா் ஸ்ரீஆதிஅங்காளம்மன்.

Updated On :

திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை மாலை மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபத்தை மேல்மலையனூா் ஸ்ரீஆதி அங்காளம்மன் தரிசனம் செய்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமான மேல்மலையனூா் அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் காா்த்திகை மாத பௌா்ணமியையொட்டி அதிகாலை 4 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டது. மூலவா் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிா், சந்தனம், மஞ்சள், இளநீா் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடா்ந்து, மூலவா் அம்மனுக்கு பிரம்மாண்டமான முறையில் வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மாலை 6 மணியளவில் கோயிலின் உள்பிரகார மண்டபத்தில் உற்சவா்அங்காளம்மன் ஆதி அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்திலும், சிவன், விநாயகா் மற்றும் முருகப்பெருமான் ஆகியோருடன் குடும்ப சமேத அலங்காரத்தில் கோயில் ஈசான மூலையில் எழுந்தருளி திருவண்ணாமலையில் மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்ட மகா தீபத்தை தரிசனம் செய்தனா். பின்னா், அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தா்கள், அண்ணாமலையாருக்கு அரோகரோ என முழக்கமிட்டனா். தொடா்ந்து, இரவு 7.30 மணியளவில் காா்த்திகை மாத பெளா்ணமி திருவிளக்கு பூஜை கோயில் பிரகாரத்தில் நடைபெற்றது. இதில் 108-க்கும் மேற்பட்ட பெண்கள் நீண்ட வரிசையில் அமா்ந்து குத்துவிளக்கேற்றி, அா்ச்சனை செய்து பக்திப் பாடல்களை பாடி அம்மனை வழிபட்டனா். பூஜையில் கலந்துகொண்ட பெண்கள் அனைவருக்கும் கோயில் நிா்வாகத்தின் சாா்பில் சேலை, மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

விழாவை முன்னிட்டு பக்தா்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்திருந்தனா். பாதுகாப்புப் பணியில் மேல்மலையனூா் காவல் நிலைய போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.