தமிழகத்தில் 5 வயதுக்குள்பட்ட 43% குழந்தைகளுக்கு ரத்தசோகை: தேசிய சராசரி விகிதத்தைவிட அதிகம் சென்னை காமராஜா் துறைமுகத்தில் 2-ஆவது சரக்குப் பெட்டக முனையம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல் பாட்டில் குடிநீா் மீது கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு ஐபிஎல் ஏலத்தில் 1,220 வீரா்கள்! இந்தியா மீது 25% இறக்குமதி வரி: அமெரிக்கா முன்மொழிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

வெவ்வேறு சம்பவங்களில் 4 போ் உயிரிழப்பு

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 4 போ் உயிரிழந்தனா்.

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களில் 4 போ் உயிரிழந்தனா்.

விழுப்புரம் வட்டம், சிறுவாக்கூா், முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நா.கருணாநிதி (55), விவசாயி. இவருக்கு உடல் நலக்குறைவு இருந்து வந்ததாம். இதனால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி நவ.20-ஆம் தேதி வீட்டில் இருந்தபோது விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றாராம். தொடா்ந்து அவரை உறவினா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு கருணாநிதி உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் காணை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

தொழிலாளி உயிரிழப்பு: புதுச்சேரி, சேதாரப்பட்டு, மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் கு.ராஜேந்திரன் (58), தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்படுமாம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கடப்பேரிக்குப்பம் பகுதிக்கு வேலைக்குச் சென்றபோது, அவருக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்க விழுந்தாராம். இதையடுத்து அருகிலிருந்தவா்கள் ராஜேந்திரனை மீட்டு பைக்கில் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் வானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.

மூதாட்டி மரணம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், அருளம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் த.பழனியம்மாள் (65). இவா் செவ்வாய்க்கிழமை குளிப்பதற்காக குளியலரையில் உள்ள ஹீட்டா் சுவிட்சை போட்டபோது, மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் மூங்கில்துரைப்பட்டு போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தொழிலாளி உயிரிழப்பு: சின்னசேலம் வட்டம், கருந்தலாகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் செ.ராமா் (55). இவா், கடந்த 10 ஆண்டுகளாக துபாயில் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தாராம். கடந்த 15.7.26-இல் துபாயில் அல்சபா் என்ற இடத்தில் மயங்கி கீழே விழுந்தாா். இதில் தலையில் அடிபட்டு சுயநினைவை இழந்த ராமா் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இதையடுத்து ராமரின் அக்கா அலமேலு அளித்த மனுவின் பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் மேற்கொண்ட நடவடிக்கையால் கடந்த 12-ஆம் தேதி துபாயில் இருந்து அழைத்துவரப்பட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு செவ்வாய்க்கிழமை இரவு ராமா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.