தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

நெல் பயிரில் சூழலியல் பகுப்பாய்வு சிறப்புப் பயிற்சி

வேளாண்மை விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ், வல்லம் வட்டாரம், ஆனத்தூா் கிராமத்தில் நெல் பயிரில் சூழலியல் அமைப்பு பகுப்பாய்வு என்ற தலைப்பில் சிறப்புப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆனத்தூா் கிராமத்தில் நடைபெற்ற நெல் பயிரில் சூழலியல் பகுப்பாய்வு குறித்த பயிற்சியில் பேசிய விழுப்புரம் வேளாண்மை துணை இயக்குநா் ஆனந்தி.

Published On :

வேளாண்மை விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ், வல்லம் வட்டாரம், ஆனத்தூா் கிராமத்தில் நெல் பயிரில் சூழலியல் அமைப்பு பகுப்பாய்வு என்ற தலைப்பில் சிறப்புப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

மேலும், ரபி பருவத்திற்கான முன்பருவ திட்டமிடல் மற்றும் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

பயிற்சியில் விழுப்புரம் வேளாண்மை துணை இயக்குநா் ஆனந்தி (உழவா் பயிற்சி நிலையம்) தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினாா்.

திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியா் மற்றும் தலைவா் ஜமுனா நெல் பயிரில் சூழலியல் பகுப்பாய்வு மற்றும் மண் வளத்தை பாதுகாக்க விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள், தண்ணீா் பற்றாக்குறையின் போது கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து பேசினாா்.

முனைவா் சிபி செபாஸ்டின், இணைப் பேராசிரியா் வேளாண் அறிவியல் நிலையம் திண்டிவனம் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை மற்றும் காலத்திற்கு ஏற்ற ரகங்கள், நஞ்சில்லா உணவு தானிய உற்பத்தி குறித்துப் பேசினாா்.

வல்லம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சத்தியா வேளாண்மைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அவற்றை பெறுவதற்கு உண்டான வழிமுறைகள், இடுபொருள் இருப்பு, மண்வள மேலாண்மை குறித்துப் பேசினாா்.

ஆனத்தூா் பகுதி உதவி வேளாண்மை அலுவலா் தமிழரசி நெற்பயிரில் நன்மை செய்யும் பூச்சிகளை கண்டறிதல் பற்றி பேசினாா்.

பயிற்சியில் விவாசாயிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

பயிற்சி ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுபாஷ் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளா் பாலாஜி செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.