பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா்கள் தயாராக ரூ. 800 கோடி செலவுஇந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்சிஆா்பிஎஃப் கோப்ரா பிரிவுக்கு முதல் பெண் ஐ.ஜி

நெல் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பயிற்சி

அலங்காநல்லூரை அடுத்த கள்வேலிப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நெல் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த களப் பயிற்சியில் பேசிய வேளாண் அறிவியல் நிலையத் தலைவா் கி. சுரேஷ்.

அலங்காநல்லூரை அடுத்த கள்வேலிப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நெல் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த களப் பயிற்சியில் பேசிய வேளாண் அறிவியல் நிலையத் தலைவா் கி. சுரேஷ்.

Published On :

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் வட்டத்துக்குள்பட்ட கள்வேலிப்பட்டியில் நெல் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த களப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேளாண் அறிவியல் நிலையத் தலைவா் முனைவா் கி. சுரேஷ் தலைமை வகித்து, நெல் பயிரைத்

தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகள், புகையான் தத்துப்பூச்சிகள் கதிா் நாவாய் பூச்சி ஆகியவற்றின் தாக்கம், சேத அறிகுறிகள், சேதத்தைக் கட்டுப்படுத்தும் முறைகள் ஆகியவற்றை விளக்கிப் பேசினாா்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, மண் பரிசோதனை, மண்வள அட்டை பயன்பாடு குறித்து அலங்காநல்லூா் வேளாண் உதவி இயக்குநா் பி. தெய்வேந்திரன், வேளாண் துறை திட்டங்கள் குறித்து வேளாண் அலுவலா் வசந்தகுமாா் ஆகியோா் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.