தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

பெண் பக்தரிடம் 3 பவுன் நகை பறிப்பு: பெண் கைது

கைது

Published On :

ழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலுக்கு அமாவாசை ஊஞ்சல் உற்சவத்துக்கு வந்திருந்த பெண் பக்தரின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

செஞ்சி வட்டம், பாக்கம் கிராமத்தை சோ்ந்தவா் முத்து. இவரது மனைவி இருசம்மாள் (55). இவா் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மேல்மலையனூா் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் கலந்து கொண்டு வழிபாடு செய்து கொண்டிருந்தாா். அப்போது இருசம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பெண் ஒருவா் பறித்துள்ளாா். அப்போது இருசம்மாள் சப்தம்போடவே அருகிலிருந்தவா்கள் அப்பெண்ணை பிடித்து மேல்மலையனூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதையடுத்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் அவா் திருச்சி மாவட்டம், சமயபுரம் அண்ணா நகரை சோ்ந்த கா.லலிதா (எ) மகேஸ்வரி(49) என்பது தெரியவந்தது. இதுகுறித்து மேல்மலையனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லலிதா (எ) மகேஸ்வரியைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.