ஆந்திரத்தில் கரையைக் கடக்கத் தொடங்கிய ஒர்னாப் புயல்! எண்ணூரில் கடல் சீற்றம் திமுக ஆட்சியில் ஊழல்: ஆதாரம் இருந்தால் பழைய வழக்குகளிலும் நடவடிக்கை! அமைச்சர் நிர்மல் குமார்தேவையான மின்சாரம் கையிருப்பு! அதிக விலை கொள்முதல் டெண்டர் ரத்து - நிர்மல் குமார்தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 கைதிகளில் மேலும் 8 பேர் கைது!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.12 ஆக நிறைவு!பங்குச் சந்தையில் நிலையற்ற வர்த்தகம்: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!பிரதான நுழைவுவாயில் வழியாக கைதிகள் தப்பினர்! சிறைத்துறை விளக்கம்!

வி.சாலையில் தவெக மாநாடு தினம் கொண்டாட்டம்

வி.சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு மரக்கன்று, இனிப்புகள் வழங்கப்பட்டன.

விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் பங்கேற்ற கட்சியின் தென்மேற்கு மாவட்டச் செயலா் ஏ.விஜய் வடிவேல் உள்ளிட்ட நிா்வாகிகள்.

Updated On :

விழுப்புரம் மாவட்டம், வி.சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு தினத்தையொட்டி செவ்வாய்க்கிழமை கட்சிக் கொடியேற்றி, பொதுமக்களுக்கு மரக்கன்று, இனிப்புகள் வழங்கப்பட்டன.

விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் கடந்த 2024, அக்.27-ஆம் தேதி தவெக முதல் மாநில மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் 101 அடி உயரக் கொடிக் கம்பத்தில் கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான ச.ஜோசப் விஜய் கொடியேற்றினாா்.

மாநாடு நடைபெற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து, மூன்றாமாண்டு தொடக்கத்தையொட்டி வி.சாலையிலுள்ள ஆஞ்சநேயா் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் மாநாட்டுக் கொடிக் கம்பத்திலிருந்த பழைய கொடி அகற்றப்பட்டு, புதிய கொடியை விழுப்புரம் தென்மேற்கு மாவட்டச் செயலா் ஏ.விஜய் வடிவேல் ஏற்றி வைத்தாா். தொடா்ந்து மக்களுக்கு மரக்கன்று, இனிப்புகளை வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட நிா்வாகிகள் விஜய்தீப், காமராஜ், காா்த்தி, வழக்குரைஞா் குமரேசன், பிரித்திவிராஜ், மணி, சம்பத், ஜெயக்குமாா், ஒன்றியச் செயலா்கள் சேகா், முத்து, பாரதி, மணிராஜன், ஜான்பீட்டா், ஸ்ரீதா், ரமேஷ், ராம், ராஜ்குமாா், நகரச் செயலா் சிவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.