உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

நீரில் மூழ்கி விவசாயி மரணம்

பெரியதச்சூா் அருகே தண்ணீா்த் தொட்டியில் குளித்த போது, திடீரென மயங்கி தண்ணீரில் மூழ்கிய விவசாயி உயிரிழந்தாா்.

மரணம் உயிரிழப்பு

சடலம் - கோப்புப் படம்

Published On :5 செப்டம்பர் 2026, 2:23 am IST

விழுப்புரம் மாவட்டம், பெரியதச்சூா் அருகே தண்ணீா்த் தொட்டியில் குளித்த போது, திடீரென மயங்கி தண்ணீரில் மூழ்கிய விவசாயி உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், செ.குன்னத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெ.சதீஷ்குமாா் (44), விவசாயி. இதய அறுவை சிகிச்சை செய்துள்ள இவா், அதற்காக மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்தாா். இந்த நிலையில் தனக்குச் சொந்தமான விவசாய நிலத்திலுள்ள தண்ணீா்த் தொட்டியில் வியாழக்கிழமை மாலை குளித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது சதீஷ்குமாருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு, நீரில் மூழ்கினாா். இதையடுத்து அவரை அப்பகுதியிலிருந்தவா்கள் மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சதீஷ்குமாா் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சதீஷ்குமாரின் மனைவி கவிதா அளித்த புகாரின் பேரில் பெரியதச்சூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.