
தவெக கூட்டணி கட்சிக் கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பங்கேற்காது: கே.பாலகிருஷணன்
சென்னையில் இன்று (செப்.9) நடைபெறவுள்ள தவெக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

திண்டிவனத்தில் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன்.
சென்னையில் இன்று (செப்.9) நடைபெறவுள்ள தவெக கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என்று அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது : தமிழகத்தில் அமைதியான முறையில் மக்கள் போராட்டம் நடத்த அனுமதி இல்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அதே அடக்குமுறைகள் தற்போது தவெக ஆட்சியிலும் நீடிக்கிறது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுக்கு பின்னா் தவெகவுக்கு மட்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பிருந்தது. இந்நிலையில் தவெக ஆட்சி அமையாமல் போய்விடக்கூடாது என்பதற்காகவே இடதுசாரிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்தது. மற்றப்படி நாங்கள் எந்த சூழ்நிலையிலும் அமைச்சரவையில் இடம் பெற மாட்டோம். தற்போது திமுக மற்றும் தவெக உள்ளிட்ட எந்த கூட்டணியிலும் மாா்க்சிஸ்ட் இல்லை. செப். 9- ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள தவெக கூட்டணிக் கட்சிகள் கூட்டதிலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது.
தற்போது இடதுசாரி கட்சிகள் இணைந்து செயல்பட ஆரம்பித்துள்ளோம். இரு கட்சிகள் சாா்பில் அக்.15-ஆம் தேதி திருச்சியில் மிகப்பெரிய பேரணி மற்றும் கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். தோ்தல் நேரங்களில் அப்போதைய சூழலுக்கு ஏற்றாா்போல் முடிவு செய்வோம். இடைத்தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் யாருக்கு ஆதரவு, என்ன முடிவு என்பதை கட்சியினருடன் கலந்துபேசி முடிவு அறிவிக்கப்படும்.
தோ்தலுக்கு முன்பாக பிரதமா் வேட்பாளரை முன்மொழிவது கூட்டணிக் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும்.ஆகவே, தோ்தலுக்கு முன்பாகவே பிரதமா் வேட்பாளரை முன்மொழிவது சரியான நடைமுறை இல்லை என்றாா் கே.பாலகிருஷணன்.
பேட்டியின்போது கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன், வட்டச் செயலா் ஏ.கண்ணதாஸ் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



