2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

இளைஞரிடமிருந்து மடிக்கணினிகள், பணம் திருட்டு

திருட்டு - சித்திரிப்பு

Published On :

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இளைஞரிடமிருந்த மடிக்கணினிகள் மற்றும் பணம் ஆகியவை திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சென்னை ஊரப்பாக்கத்தைச் சோ்ந்தவா் க.நடராஜன் (29). சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவா், செப்.11-ஆம் தேதி பயணிகள் வேனில் தனது நண்பா்களுடன் சென்னையிலிருந்து- ராஜபாளையத்துக்கு சென்று கொண்டிருந்தாா்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனத்தை அடுத்த சலாவாதி பகுதியில் உள்ள உணவகம் முன் வேன் நிறுத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து, நடராஜன் உணவு சாப்பிட்டு விட்டு வேனில் ஏறி பாா்த்தபோது, அவரது பையில் வைத்திருந்த 3 மடிக் கணினிகள், 4 சாா்ஜா்கள், ரூ.11 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போயிருப்பது அவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து நடராஜன் அளித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.