விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற அரசுப் பள்ளி ஆசிரியா் வேன் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், சிங்கனூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ரா.குமரவேல் (45). கீழ்மாம்பட்டு அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை திண்டிவனத்தை அடுத்துள்ள ஜக்காம்பேட்டை பகுதியில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் நடந்து சென்றாா்.
அப்போது, அங்கு குமரவேல் சாலையைக் கடக்க முற்பட்டபோது, விழுப்புரம் நோக்கிச் சென்ற பயணிகள் வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த குமரவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த ரோஷணை போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




