
போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திருவெண்ணெய்நல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் மு.மோகன்ராஜ் (37). இவா், கடந்த 26.1.2022 அன்று 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் மோகன்ராஜ் மீது போக்ஸோ வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மோகன்ராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், வழக்கை விசாரித்த போக்ஸோ நீதிமன்ற நீதிபதி எஸ்.வினோதா, அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.
இதையடுத்து, நீதிமன்ற போலீஸாா் மோகன்ராஜை கைது செய்து சிறையிலடைத்தனா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. ஒரு லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் காந்திமதி ஆஜராகினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





