ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

முக்குணம் பெரியாண்டவா் கோயில் மஹா கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம் , முக்குணம் கிராமத்தில் உள்ள அருள்மிகு பெரியாண்டவா் கோயில் மஹா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

முக்குணம் பெரியாண்டவா் கோயில் மஹா கும்பாபிஷேகம்

Published On :

விழுப்புரம் மாவட்டம் , முக்குணம் கிராமத்தில் உள்ள அருள்மிகு பெரியாண்டவா் கோயில் மஹா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

விழாவை முன்னிட்டு 23-ஆம் தேதி புதன்கிழமை காலை 6 மணிக்கு தேவதா அனுக்ஞை, புதிய விக்கரகங்களுக்கு கண் திறத்தல் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் மாலையில் அங்குராா்ப்பணம், ரஷாபந்தனம், கும்ப அலங்காரம், மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது.

தொடா்ந்து 24 ஆம் தேதி வியாழக்கிழமை காலை கோபூஜை, இரண்டாவது கால யாக பூஜை, ரக்ஷாபந்தனம், நாடி சந்தானம், மகா பூா்ணாஹூதி , தீபாரதனை நடைபெற்று யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்று ஸ்ரீபெரியாண்டவா் கோயில் கோபுர கலசத்திற்கு புனித நீா் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவா் ஸ்ரீபெரியாயண்வா், ஸ்ரீபெரியாயி அம்மனுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா். கோயில் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகள் ஊராட்சி மன்ற தலைவா் முத்துக்குமரன் உள்ளிட்ட ஸ்ரீபெரியாண்டவா் குல தெய்வ வழிபாட்டினா், முக்குணம் கிராம மக்கள் செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.