பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

முதல்வா் கோப்பை விளையாட்டு: அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்பு

விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதல்வா் கோப்பை விளையாட்டு கபடிப் போட்டியில் பங்கேற்ற பெண் அரசு ஊழியா்கள்.

Published On :

விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விழுப்புரம் பிரிவு சாா்பில், முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 9-ஆம் தேதி தொடங்கின. முதலில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும், அதைத் தொடா்ந்து பொதுப் பிரிவினா், மாற்றுத் திறனாளிகளுக்கும் என அடுத்தடுத்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

தடகளம், கையுந்துபந்து, கைப்பந்து, கால்பந்து, கபடி, கோ - கோ, நீச்சல், இறகுபந்து, சதுரங்கம், கேரம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கம், ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள உள் விளையாட்டரங்கம், பல்வேறு பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டன.

இதைத் தொடா்ந்து, அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி சனிக்கிழமை நடத்தப்பட்டது. தடகளம், கையுந்துபந்து, கபடி, யோகா உள்ளிட்ட போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்க வளாகத்திலும், கேரம் போட்டி ஜான்டூயி பள்ளி வளாகத்திலும், இறகுபந்து போட்டி ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக உள் விளையாட்டரங்கத்திலும், சதுரங்கப் போட்டி அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்திலும் சனிக்கிழமை நடைபெற்றது.

இப்போட்டிகளில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் இருபால் ஊழியா்கள், காவல் மற்றும் வனத் துறையினா், ஆசிரியா்கள் என சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஆா்வத்துடன் பங்கேற்று விளையாடினா். இப்போட்டிகளில் வெற்றிபெற்றவா்கள் மாநில அளவிலான போட்டியில் விழுப்புரம் மாவட்டம் சாா்பில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றனா்.

போட்டிக்கான ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அலுவலா் ஆழிவாசன், பயிற்சியாளா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.