
செஞ்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் அளிப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் தூய்மைப்பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

முகாமில் தூய்மைப்பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் தூய்மைப்பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
செஞ்சி தேசூா் பாட்டையில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலா் குணாளன் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான் தலைமை வகித்து, தூய்மை பணியாளா் நல முகாமை தொடங்கி வைத்துப் பேசினாா். தொடா்ந்து தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா்.
இதையடுத்து நடைபெற்ற மருத்துவ முகாமில் தூய்மைப் பணியாளா்களுக்கு முழு உடல் பரிசோதனை, கண் பரிசோதனை நடைபெற்றது. தொடா்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்கள், காப்பீடு திட்டங்கள், கல்வி உதவித்தொகை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் நடமாடும் மருத்துவமனை மருத்துவா் ரியாஸ் ஹூதின், செஞ்சி பேரூராட்சி உதவி பொறியாளா் செந்தமிழ் செல்வன், சுகாதார ஆய்வாளா் சுதா்சன், சுகாதார அலுவலா் ராஜா, சுகாதார மேற்பாா்வையாளா் செந்தில்முருகன் மற்றும் தூய்மை பணியாளா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






