47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 75.3 சதவீதம் வாக்குப் பதிவு

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவில் சுமார் 75.3 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
Updated On :24 ஏப்ரல் 2014, 4:09 pm

சங்கர்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவில் சுமார் 75.3 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை, சீர்காழி (தனி), பூம்புகார், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 13,49,796. ஆண்கள்- 6,79,584. பெண்கள்- 6,70,211.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் வாக்குப் பதிவு 1,582 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதியில் 244 வாக்குச் சாவடிகளிலும், சீர்காழி தொகுதியில் 264 வாக்குச் சாவடிகளிலும், பூம்புகார் தொகுதியில் 294 வாக்குச் சாவடிகளிலும், பாபநாசம் தொகுதியில் 274 வாக்குச் சாவடிகளிலும், திருவிடைமருதூர் தொகுதியில் 261 வாக்குச் சாவடிகளிலும், கும்பகோணம் தொகுதியில் 245 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு நடபெற்றது.

மயிலாடுதுறை அறிவாலயம் பள்ளி, சீர்காழி செம்மங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பூம்புகார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி வாக்குச் சாவடிகளிலும், பாபநாசம் தொகுதிக்குள்பட்ட அய்யம்பேட்டை பகுதியில் 2 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, வாக்குப் பதிவைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 

அய்யம்பேட்டையில் 2 வாக்குச் சாவடிகளிலும், சீர்காழியில் ஒரு வாக்குச் சாவடியிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உடனடியாக மாற்றப்பட்டன. மற்ற வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உடனடியாக சீரமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் வாக்குப் பதிவு தொடக்கத்திலிருந்து சுமார் 11 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணி முதல், காலை 11 மணி வரை 34.5 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

வெயிலின் தாக்கம் காரணமாக பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வாக்குப் பதிவு வேகம் சற்று குறைந்திருந்தது. வெயிலின் தாக்கம் குறைந்ததைத் தொடர்ந்து, பகல் 3 மணியிலிருந்து வாக்குப் பதிவு மீண்டும் விறு, விறுப்படைந்தது.  காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலான நிலவரப்படி, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 67.63 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

மாலை 6 மணி வரையிலான வாக்குப் பதிவின் நிறைவில், இத்தொகுதியில் சுமார் 75.3 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக முதல்கட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இந்தக் கணக்கெடுப்புப்படி, சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக பதிவான வாக்குகளின் எண்ணிக்கை :

சீர்காழி- 1,68,173,

மயிலாடுதுறை- 1,58,367,

பூம்புகார்- 1,77,781,

திருவிடைமருதூர்- 1,71,462,

கும்பகோணம்- 1,70,663,

பாபநாசம்- 1,70,689.

மொத்தம்- 10,17,135.

வாக்குப் பதிவு சதவீதம் 75.3.

இறுதிக்கட்ட, துல்லியமான கணக்கெடுப்பின் போது, இந்தப் புள்ளி விவரங்களில் மாற்றம் இருக்கவும் வாய்ப்புள்ளது என அலுவலர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.