டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அதிமுகவுக்கு மாற்று திமுக இல்லை: ராமதாஸ்

அதிமுகவுக்கு மாற்றாக திமுக இருக்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:55 pm

அரவிந்தன்

அதிமுகவுக்கு மாற்றாக திமுக இருக்க முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்க இன்னும் 22 நாள்களே உள்ள நிலையில் அதற்கான களப்பணிகளில் பாமக தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. தேர்தலில் வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரின் கவனமும் களப் பணிகளில் தான் இருக்க வேண்டும்.

 ஆனால், கருணாநிதியோ கள நிலவரம் புரியாமல் அதிமுகவுக்கு மாற்று திமுகதான் என்று தமக்குத்தாமே ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார்.

 ஒரு தேர்தலில் தமது கட்சிதான் வெற்றி பெறும் என்று கூறுவதற்கான அனைத்து உரிமைகளும் அக்கட்சித் தலைவருக்கு உண்டு.   ஆனால், பாமகவுக்கு பரவலான பலம் இல்லை. அதிமுக மாற்று திமுக மட்டுமே மாற்று என்று பெருமிதமாக கூறியுள்ளார்.

 அதிமுகவுக்கு திமுக எந்த வகையில் மாற்றாக இருக்க முடியாது. அதிமுகவும் திமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று காமராஜர் கூறினார்.

 தமிழகம் இப்போது எதிர்கொண்டு வரும் பிரச்னைகளுக்கான தீர்வு திமுகவிடம் இல்லை. மதுவுக்கு எதிராக 35 ஆண்டுகளாக நான் நடத்தி வரும் போராட்டம் காரணமாக மக்களிடம் எழுச்சி ஏற்பட்டது. இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் மது ஆறாக ஓட தாம்தான் காரணம் என்பதையெல்லாம் மறந்து விட்டு திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல் படுத்தப்படும் என்று திமுக கூறுகிறது. இது சந்தர்ப்பவாதம்.

 ஊழலில் ஊற்றுக்கண்ணான தி.மு.க.வால் ஊழலை ஒழிக்க முடியாது.  தெளிவாக கூற வேண்டுமானால் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே தான் போட்டி என்று கருணாநிதி கூறியிருப்பது ஒரு நயவஞ்சகத் திட்டம் ஆகும்.

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையுமே ஆட்சிக்கு வர அனுமதிக்கக்கூடாது என்பது தான் மக்களின் விருப்பம்.  இந்த இரு கட்சிகளுக்கும் மாற்று தேவை என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்றுதான் பாமக என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.