தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தேர்தலில் விஜயகாந்த் வைப்புதொகையை இழப்பார்: ராமதாஸ்

உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் வைப்புத்தொகையை இழப்பார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

Updated On :20 ஏப்ரல் 2016, 2:48 am

உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் வைப்புத்தொகையை இழப்பார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக பாமக வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தியாகராய நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். தலைவர் ஜி.கே.மணி, முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியது:

உளுந்தூர்பேட்டையில் பாமகவை எதிர்த்து போட்டியிடும் விஜயகாந்த் வைப்பு தொகையை இழப்பது உறுதி. பாமகவுக்கு கூடுதல் பலம் சேர்க்கவே வேட்பாளரை மாற்றி புதிய வேட்பாளராக வழக்குரைஞர் பாலுவை அறிவித்து உள்ளோம் என்றார்.

அன்புமணி ராமதாஸ் கூறியது:

 பாமக அனைத்துத் தொகுதிகளும் வெற்றிபெறும். பிரசாரத்தை ஆரம்பித்த பிறகுதான் ஜெயலலிதாவுக்கு வீழ்ச்சி தொடங்கி உள்ளது. வெள்ளப் பாதிப்பின்போது வெளியே வராமல் இருந்துவிட்டு இப்போது வாக்குக்காக மக்களைச் சந்திக்க வருகிறார். அவருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர்.

 திமுக உட்கட்சி பூசலில் தவிக்கிறது. மக்கள் நலக்கூட்டணியில் ஒற்றுமை கிடையாது. அது முரண்பாடான அணி. எந்த கட்சியிலும் இடம் கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு கூட்டணி வைத்துள்ளார். உண்மையில் இந்த தேர்தலில் எனக்கும், ஜெயலலிதாவுக்கும் தான் போட்டி என்றார் அவர்.

ஏ.கே.மூர்த்திக்கு வாய்ப்பு: முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.