தூத்துக்குடியில் மகளிர் சுய உதவிக் குழு பெண்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார்
தூத்துக்குடியில் உள்ள கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள மகாசேமம் மகளிர் சுய உதவிக் குழுகள் அலுவலகம் உள்ளது.


தூத்துக்குடியில் உள்ள கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள மகாசேமம் மகளிர் சுய உதவிக் குழுகள் அலுவலகம் உள்ளது.
இந்த மகாசேமம் மகளிர் சுய உதவிக் குழுகள் மாதாநகர். லுர்தம்மாள்புரம், எம்.ஜி.ஆர் நகர், தாளமுத்துநகர், முத்துகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 4000க்கும் மேற்பட்ட பெண்கள் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினராக உள்ளனர். இங்கு உள்ள மகளிர் குழு பெண்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்தாக தூத்துக்குடி சட்டமன்ற தேர்தல் அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி சிவராஜன் தலைமையில் அதிகாரிகள் விரைந்து வந்து மகாசேமம் மகளிர் சுய உதவிக் குழுகள் அலுவலகத்தில் சோதனை மேற்க்கொண்டனர்.
அப்போது அலுவலகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட மகளிர் குழு பெண்களை அதிகாரிகள் சிறை பிடித்து மகாசேமம் மகளிர் சுய உதவிக் குழுகள் ஓருங்கிணைப்பாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மகளிர் குழு பெண்களுக்கு தொழில் கடனாக 10ஆயிரம் முதல் 15ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
ஆனால் தேர்தல் விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது குழு பெண்களுக்கு கடன் வழங்க கூடாது என தெரிவித்து கடன் வழங்குவதற்காக வைத்திருந்த 5லட்சத்திற்கு மேற்பட்ட பணம் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...