மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காங்கிரஸ்-என்.ஆர். காங். கட்சிகளை புறக்கணிக்க வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

மக்களை மறந்து செயல்பட்ட காங்கிரஸ்- என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளை வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமக்கிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.

News image
Updated On :7 மே 2016, 9:05 am

சுஜித்குமார்

மக்களை மறந்து செயல்பட்ட காங்கிரஸ்- என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகளை வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமக்கிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார்.

தேமுதிக, மக்கள்நலக்கூட்டணி சார்பில்  புதுச்சேரி திருபுவனை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எல்.கலிவரதனுககு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரம் வெள்ளிக்கிழமை இரவு  மதகடிப்பட்டில் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமக்கிருஷ்ணன் பிரசாரம் செய்து பேசியதாவது:

புதுச்சேரி பிரதேசத்தில் தேமுதிக, மக்கள்நலக்கூட்டணி கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றன. இப்பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் இடம் பெயர்ந்துள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் என்.ஆர்.காங்கிரஸ் முதல்வர் என்.ரங்கசாமி ஆட்சியில் ரியல்எஸ்டேட் அதிபர்களும், சுயநிதி கல்லூரி அதிபர்களுமே வளர்ந்துள்ளனர்.

இந்தியாவிலேயே சிறிய பிரதேசமாக உள்ள புதுச்சேரியில் தான் வேலையின்மையில் முதன்மை இடத்தை பிடித்துள்ளது. எனவே தான் இங்கு ஆட்சி செய்த காங்கிரஸ், திமுக, கட்சியானாலும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியானாலும சரி இவர்கள் மக்களை மறந்தவர்கள். இத்தேர்தலில் அக்கட்சிகளை வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும்.

முதன் முதலில் கூட்டணி ஆட்சி அமைக்க பாடுபட்டு வரும் தேமுதிக, மக்கள்நலக்கூட்டணியை ஆதரிக்க வேண்டும். மக்களுக்காக முழுநேரமாக அர்ப்பணித்தவர் எல்.கலிவரதன் அவருக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார் ராமகிருஷ்ணன்..

மதகடிப்பட்டுக்கு வந்த ஜி.ராமகிருஷணனுக்கு தேமுதிக,மக்கள் நலக்கூட்டணி கட்சி தலைவர்கள் உலகநாதன், சங்கர், அன்புமணி, ஆனந்தன்,  பத்மநாபன், அ.க.விடுதலைச்செல்வன், கலியபெருமாள், உள்ளிட்ட திரளான கூட்டணி கட்சி தொண்டர்கள் பங்கேற்று  வரவேற்பு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.