மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு

புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

News image
Updated On :9 மே 2016, 7:18 am

சுஜித்குமார்

புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிரவி, மங்கலம், ஏம்பலம் தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை மாநில பொதுச் செயலாளர் சோ.பாலசுப்பிரமணியன் வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு அம்சங்கள் வருமாறு:

புதுச்சேரி மக்கள் வளர்ச்சியை முடக்கிய பொருளாதாரக் கொள்கைகளை மாற்ற வேண்டும்.

விவசாய நிலங்களை பாதுகாக்க புதிய சட்டம், மரபான மீன்பிடி மண்டலங்களை அரசு, தனியார் கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். அரியாங்குப்பத்தில் கடலோரக் காவல்படை தளம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

புதுவையில் அசையாச் சொத்துக்களை வெளிமாநிலத்தவர் பெருமளவில் வாங்கிக் குவிப்பதை தடுக்க வேண்டும். சிறு, நடுத்தரத் தொழில்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

சுகாதாராம், கல்வி, அறிவியல் ஆராய்ச்சியில் மாநில பொது ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஆண்டுக்கு 200 நாள்களாக மாற்றுவது. நகர்ப்புற நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வர வேண்டும், மனித உரிமைகள், சுற்றுச்சூழலை மேம்படுத்துதல், மபரணு பயிர்கள் புதுவையில் பயிரிடுலதை தடை செய்ய வேண்டும்.

விசாரணை என்ற பெயரில் நீண்ட நாள்கள் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும்.

படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித் தொகை, சிறுபான்மையினத்தவருக்கு சமூக பாதுகாப்பு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை புதுவையில் கட்டாயமாக அமுல்படுத்த வேண்டும்.

பெண்களுக்கு பாதுகாப்பான, கெüரவமான ஊதியம் தர வேண்டும். சிறப்பு நிதி ஆதாரத்துடன் மாநில அந்தஸ்து தர வேண்டும், புதுவை மாநில கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை, லோக் ஆயுக்தா உருவாக்கப்படும், கல்வி கட்டணங்கள் முறைபடுத்தப்படும் உள்ளிட்டவை தேர்த்ல அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.