தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தமிழகம், புதுவையில் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்: நக்மா

தமிழகம்-புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர், நடிகை நக்மா கூறியுளளார்.

News image
Updated On :13 மே 2016, 6:53 am

சுஜித்குமார்

தமிழகம்-புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர், நடிகை நக்மா கூறியுளளார்.

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களிட் கூறியதாவது:

தமிழகத்தில் அதிமுக, புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். வெள்ள பாதிப்பின் போது தமிழகத்தில் வழங்குவதாக கூறப்பட்ட ரூ.5 ஆயிரம் தொகையைக் கூட அதிமுக அரசு முழுமையாக வழங்கவில்லை. எனவே மாற்றத்தை மக்கள் விரும்புவதால் காங்கிரஸ்-திமுக கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெறும்.

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி கடந்த தேர்தலின் போதும் வாஷிங்மெஷின் தரப்படும் என அறிவித்தார். ஆனால் தரவில்லை. தற்போது அதே வாக்குறுதியை மீண்டுóம அறிவித்துள்ளார். மக்களை ஏமாற்றி விடலாம் என அவர் நினைத்து செயல்படுகிறார்.

மத்திய பாஜக அரசு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என கூறியது. ஆனால் இதுவரை 1 லட்சம் பேருக்கு கூட வேலை தரவில்லை.

உத்தரகாண்டில் ஜனநாயகம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசு மீண்டும் மலர்ந்துள்ளது. பாஜக அரசின் செயல்பாடுகளால் மீண்டும் காங்கிரஸ் கட்சி எழுச்சி பெறுகிறது.

கட்சித் தலைமை கூறினால் தான் தேர்தலில் போட்டியிடுவேன். நானாக பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்கவில்லை. புதுவையில் ஒரு பெண் வேட்பாளருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. உள்ளூர் சூழலை அனுசரித்து வாய்ப்பு தந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் மகளிருக்கு மேலும் பல பதவிகள் வழங்குவர் என்றார் நக்மா.

மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் பிரேமலதா, நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.