சென்னை: யாருக்கு நான் வாக்களிப்பது என்று கொளத்தூரில் வாக்குச்சாவடி அதிகாரியிடமே, ஒரு வாக்காளர் கேட்டதால், அந்த அதிகாரி தர்மசங்கடத்தில் நெளிய வேண்டிய நிலை ஏற்பட்டது.
கொளத்தூர் தொகுதி திருவீதியம்மன் கோயில் அருகில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் காலை 7 மணி முதலே பரபரப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது. நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று வாக்களித்தனர். அந்தப் பள்ளியில் 45-ஆவது பாகத்துக்குரிய வாக்குப் பதிவு மையத்தில் ஓர் இளைஞர் வாக்களிக்க வந்தார். ஆட்டிஸம் பாதிப்பு உள்ளவராக இருந்தார். அவருடன் உதவியாளர் யாரும் வரவில்லை. பூத் சிலிப், வாக்காளர் அடையாள அட்டை என அனைத்தையும் கொண்டு வந்தார். அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, விரலில் மை வைத்து அவரை வாக்களிக்க அனுமதித்தனர்.
வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு முன் சென்றவர், அங்கிருந்து எதை அழுத்ததுவது என்றார்.
அதற்கு, பெண் அதிகாரி நீல நிற பட்டன் இருக்கும் அதை அழுத்துமாறு கூறினார்.
ஆனால், அந்த இளைஞர் மீண்டும், யாருக்கு அழுத்துவது என்று கேட்டார். இந்தக் கேள்வியால் அந்த மையத்தில் உள்ள அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். திமுக, அதிமுக, பாமக தேர்தல் முகவர்கள் அதிகாரியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பிறகு, அந்தப் பெண் அதிகாரி ஒருவாறு சமாளித்து, ஏதாவது ஒரு நீலப் பட்டனை அழுத்துமாறு கூற, அந்த இளைஞரும் ஏதோவொரு பட்டனில் அழுத்த, பீப் சத்தமும் கேட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

