ஜூலை 29-இல் கர்நாடக அதிமுக நிர்வாகிகள் கூட்டம்
கர்நாடக மாநில அதிமுக நிர்வாகிகள் கூட்டம், பெங்களூரில் ஜூலை 29-ஆம் தேதி நடைபெறுகிறது.
கர்நாடக மாநில அதிமுக நிர்வாகிகள் கூட்டம், பெங்களூரில் ஜூலை 29-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாநில அதிமுக செயலாளர் எம்.பி. யுவராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கர்நாடக மாநில அதிமுக நிர்வாகிகள் கூட்டம் பெங்களூரு, காந்திநகர் தொகுதிக்குள்பட்ட ஸ்ரீராமபுரத்தில் உள்ள சாய்பாபா திருமண மண்டபத்தில் ஜூலை 29-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது.
மாநில அவைத் தலைவர் கே. முனுசாமி தலைமையில் நடைபெறும் இக் கூட்டத்தில் மாநில இணைச் செயலாளர்கள் தனம்மாள், எஸ்.டி. குமார் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் மாநிலக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதிச் செயலாளர்கள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகத்தில் அதிமுகவை வளர்த்தெடுப்பது, புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்துக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன. இதில் கட்சியின் மாநிலக் கழக நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி செயலாளர்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்: பெங்களூரு மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் சிவாஜி நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்கள் கட்சி தொண்டர்களுக்கு வழங்கப்பட்டன.
மாவட்ட அவைத் தலைவர் காசிராஜன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் குணசுந்தரி, துணைச் செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கர்நாடக மாநில அதிமுக இணைச் செயலாளர் எஸ்.டி. குமார், கட்சி தொண்டர்களுக்கு புதிய உறுப்பினர் படிவங்களை வழங்கினார்.
மேலும் நிறைவு செய்த விண்ணப்பப் படிவங்களை கட்சி தொண்டர்கள் எஸ்.டி. குமாரிடம் வழங்கினர். இதைத் தொடர்ந்து, எஸ்.டி. குமார் சிறப்புரை ஆற்றினார்.
கர்நாடக மாநில இளைஞர் அணிச் செயலாளர் அன்புவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் வேடியப்பன், சுந்தரேசன், செல்வி, தொகுதி செயலாளர்கள் டி. அன்பரசன், மணி, துரைராஜ், சக்திவேல், பாபு, மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் சாந்தி ராமதாஸ், அம்மா பேரவை முன்னாள் செயலாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.