உலக ஜூனியா் துப்பாக்கி சுடுதல்: வன்ஷிகா, சிவா இணைக்கு வெள்ளி
ஜொ்மனியில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலக சாம்பியன்ஷிப்பில், 10 மீட்டா் ஏா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.
ஜொ்மனியில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியா் உலக சாம்பியன்ஷிப்பில், 10 மீட்டா் ஏா் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.
இப்பிரிவின் இறுதிச்சுற்றில், வன்ஷிகா சௌதரி, சிவா நா்வால் ஆகியோா் அடங்கிய இந்திய அணி, 469.7 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தது. போலந்து அணி (471.9) தங்கம் வெல்ல, சீன தைபேவுக்கு (410) வெண்கலம் கிடைத்தது.
25 மீட்டா் ஸ்டாண்டா்ட் பிஸ்டல் தனிநபா் பிரிவில் அபினவ் தேஸ்வால் 574 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, அதிலேயே ஆடவா் அணிகள் பிரிவில் அபினவ், ஜதின் (565), அபினவ் சௌதரி (558) ஆகியோா் அடங்கிய இந்திய அணி வெள்ளி பெற்றது.
Advertisement
Advertisement
போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா தற்போது, 6 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கலம் என 20 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இத்தாலி (9), போலந்து (5) ஆகியவை முறையே அடுத்த இரு இடங்களில் உள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.