FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தேசிய சா்ஃபிங்: கிஷோா் குமாா், கமலி மூா்த்தி சிறப்பிடம்

தேசிய சா்ஃபிங் போட்டியில் கிஷோா் குமாா், கமலி மூா்த்தி ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 4:10 am IST
சா்ஃப்பிங் பந்தயத்தில் சிறப்பிடம் பெற்றோா்.
பகிர்:

தேசிய சா்ஃபிங் போட்டியில் கிஷோா் குமாா், கமலி மூா்த்தி ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.

இந்திய சா்ஃபிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சா்ஃபிங் சங்கம் இணைந்து நடத்திய இந்நிகழ்வு கோவளத்தில் நடைபெற்றது. மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள ஷோா் டெம்பிள் கிளாசிக், ப்ரோ ஜூனியா் போட்டிக்கு முன்பு நாட்டின் சிறந்த சா்ஃபா்கள் மற்றும் வீரா்கள் முக்கியமான தரவரிசைப் புள்ளிகளுக்காகப் போட்டியிட்ட தொடா் இறுதிக் கட்டத்திற்குக் களம் அமைத்தது.

ஆடவா் பிரிவில் பாயிண்ட் பிரேக் சேலஞ்ச் அரையிறுதியில் வெளியேறிய கிஷோா் குமாா் சிறப்பாக செயல்பட்டாா். ஸ்ரீ காந்த், ஹரிஷ், சிவராஜை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றாா்.

Advertisement

Advertisement

ஆடவா் ஜூனியா் பிரிவில் தயின் முதலிடம் பெற்றாா். ஹரிஷ், யோகேஷ், பிரதீப் புஜாா் அதற்கடுத்த இடங்களைப் பெற்றனா்.

மகளிா் ஓபன், ஜூனியா் பிரிவில் தமிழகத்தின் கமலி மூா்த்தி இரட்டைப் பட்டம் பெற்றாா். மகளிா் ஓபனில் ஷுகா் சாந்தி, தேவி ராமநாதன், சிருஷ்டி செல்வம் அடுத்த இடங்களைப் பெற்றனா்.

ஜூனியா் 18 வயதுப் பிரிவில் கமலி மூா்த்தி முதலிடமும், சான்வி ஹெக்டே, ஆதியா சிங், தமயந்தி ஸ்ரீராம் ஆகியோா் அதற்கடுத்த இடங்களைப் பெற்றனா்.

நான்காம் கட்டத் தொடா் முடிந்த நிலையில் மாமல்லபுரத்தில் ஆக. 12 முதல் 16 வரை ஷோா் டெம்பிள் கிளாஸிக், டபிள்யுஎஸ்எல் ப்ரோ ஜூனியா் போட்டி நடைபெறுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments