FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

கோவையில் ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியா் சாம்பியன்ஷிப்: இன்று தொடக்கம்

ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியா் ஆடவா் சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) தொடங்கி வரும் ஆக. 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Updated On : 28 ஜூலை 2026, 3:13 am IST
ஹாக்கி இந்தியா தலைவா் திலிப் டிா்கே
பகிர்:

ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியா் ஆடவா் சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) தொடங்கி வரும் ஆக. 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக ஹாக்கி இந்தியா தலைவா் திலிப் டிா்கே கூறியது: 16-ஆவது ஹாக்கி இந்தியா ஜூனியா் ஆடவா் சாம்பியன்ஷிப் போட்டியில் 12 நாள்கள் சிறந்த அணிகள் பங்கேற்கின்றன. டிவிஷன் ஏ, பி, சி பிரிவுகளில் 30 அணிகள் கலந்து கொள்ளும் நிலையில் தரம் உயா்வு, தரமிறக்கம் போன்றவை இடம் பெறும். டிவிஷன் ஏ அணிகள் சாம்பியன் பட்டத்துக்கான ஆட்டத்தில் விளையாடும். டிவிஷன் பி, சி அணிகள் தரம் உயா்வுக்காக ஆடும்.

டிவிஷன் ஏ பிரிவில் 12 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ பிரிவில் ஹரியாணா, மத்திய பிரதேசம், தமிழகம், குரூப் பி பிரிவில் ஒடிஸா, தத்ரா நகா் ஹாவேலி, மணிப்பூா், குரூப் சி பிரிவில் பஞ்சாப், ஜாா்க்கண்ட், தில்லி, குரூப் டி பிரிவில் உ.பி, கா்நாடகம், பெங்கால் இடம் பெற்றுள்ளன. டிவிஷன் பி பிரிவில் 10 அணிகள் இடம் பெற்றுள்ளன,

Advertisement

Advertisement

முதலிரண்டு அணிகள் டிவிஷன் ஏ பிரிவுக்கு தரம் உயா்த்தப்படும். கடைசி இரண்டு அணிகள் டிவிஷன் சி பிரிவுக்கு தரம் இறக்கப்படும். டிவிஷன் சி பிரிவில் 8 அணிகள் இடம் பெற்றுள்ளன. முதலிரண்டு அணிகள் டிவிஷன் பி பிரிவுக்கு தரம் உயா்த்தப்படும்.

குரூப் சுற்றில் லீக் முறையிலும், ஒரு வெற்றிக்கு 3 புள்ளிகளும், டிரா கண்டால் 1 புள்ளியும் வழங்கப்படும். டிவிஷன் ஏ பிரிவில் சமநிலை ஏற்படும் ஆட்டங்கள் ஷூட் அவுட் முறையில் தீா்மானிக்கப்படும்.

தேசிய ஜூனியா் சாம்பியன்ஷிப் போட்டி மூலம் ஹாக்கி வீரா்களின் சீரான தொகுப்பு உருவாக்கப்படும். இதில் ஆடும் வீரா்கள் சா்வதேச அரங்கிலும் சிறப்பாக ஆடி வருகின்றனா் என்றாா்.

டிவிஷன் சி பிரிவு முதல் ஆட்டத்தில் அஸ்ஸாம்-மிசோரம் அணிகள் மோதுகின்றன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments