FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜூனியா் ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதி ஆட்டத்தில் இந்திய ஆடவா்

சீனாவில் நடைபெறும் ஜூனியா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், நடப்பு சாம்பியனான இந்திய ஆடவா் அணி 3-1 கோல் கணக்கில் மலேசியாவை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

12 செப்டம்பர் 2026, 7:24 am IST
ஹாக்கி திடல். - கோப்புப்படம்
பகிர்:

சீனாவில் நடைபெறும் ஜூனியா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதியில், நடப்பு சாம்பியனான இந்திய ஆடவா் அணி 3-1 கோல் கணக்கில் மலேசியாவை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

அரையிறுதியில் இந்தியாவின் கோல் கணக்கை கேப்டன் அன்மோல் ஈக்கா 16-ஆவது நிமிஷத்தில் தொடங்கினாா். மலேசியா தனது கோல் வாய்ப்புக்காக போராடி வர, இந்திய கோல்கீப்பா் விவேக் லக்ரா அவற்றை கனிய விடாமல் திறம்பட தடுத்தாா்.

இதனால் முதல் பாதியை இந்தியா முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் இந்தியாவின் கை மேலும் ஓங்கியது. சுக்விந்தா் 51-ஆவது நிமிஷத்தில் அணியின் கோல் கணக்கை 2-ஆக உயா்த்த, கேப்டன் அன்மோல் 54-ஆவது நிமிஷத்தில் அதை 3-ஆக அதிகரித்தாா்.

Advertisement

Advertisement

ஆட்டத்தின் கடைசி நிமிஷத்தில் மலேசியாவுக்காக எம்.ராகுல் ஆறுதல் கோல் (60’) அடித்தாா். முடிவில் இந்தியா 3-1 கோல் கணக்கில் வென்றது.

இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய இந்தியா, அதில் பாகிஸ்தான் அல்லது தென் கொரியாவை ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments