மூவர் ஹாட்ரிக்: 16-1 என்ற கோல் கணக்கில் இலங்கையை வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணி!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் அபார வெற்றி குறித்து...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 16-1 என்ற கோல் கணக்கில் இலங்கையை வீழ்த்தி, அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
முதல் போட்டியில் இந்திய அணி 13-1 என்ற கோல் கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது. முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி ஆதிக்கத்துடன் விளையாடி வருகிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இந்திய அணி இடம்பெற்றுள்ளது. இதில் மூவர் ஹாட்ரிக் கோல்கள் அடித்து மிரட்டினார்கள்.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் ஜுக்ராஜ் சிங் (10', 22', 42', 53') நான்கு கோல்களை அடித்தார்; அதேவேளையில் அபிஷேக் (11', 17', 49') மற்றும் தில்ப்ரீத் சிங் (30', 38', 55') ஆகியோரும் ஹாட்ரிக் கோல்களை அடிது அசத்தினார்கள்.
கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் (16', 45') இரண்டு கோல்கள் அடித்தார். இலங்கை சார்பில் சுரேஷ் ரத்நாயக்க 50ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை அணி முதல்முறையாக இந்திய அணிக்கு எதிராக கோல் அடித்து வரலாறு படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி அடுத்த போட்டியில் தென் கொரியா உடன் வியாழக்கிழமை மோதவிருகிறது. கடந்த 2022 ஆசிய விளையாட்டில் இந்திய அணி தங்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.
Jugraj, Abhishek, Dilpreet's hat-tricks hand India 16-1 win over Sri Lanka
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.