இலங்கையை 45 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா..! இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை!
ஆசிய விளையாட்டு அரையிறுதியில் அபார வெற்றி பெற்ற இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி குறித்து...
ஆசிய விளையாட்டு அரையிறுதியில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதவிருக்கிறது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 80* ரன்கள் குவித்தார்.
Advertisement
Advertisement
அடுத்து பேட்டிங் செய்த இலங்கை அணி 9.5 ஓவர்களில் 45 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக நுவனிது ஃபெர்னாண்டோ மட்டுமே இரட்டை இலக்கில் (15) ரன்கள் எடுத்தார்.
மற்ற இலங்கை வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து சொதப்பினார்கள். இதில் ஆறு இலங்கை வீரர்கள் ஒரு ரன் கூட எடுக்காமல் பூஜ்ய ரன்னில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா சார்பில் பும்ரா, அக்ஷர் படேல், அபிஷேக் சர்மா தலா 2 விக்கெட்டுகளும் வாஷிங்டன் ஒரு விக்கெட்டும் எடுத்தார்கள். மூன்று ரன் அவுட்டுகளை செய்த இந்திய அணியினர் ஃபீல்டிங்கிலும் மிரட்டினார்கள்.
இந்தப் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதவிருக்கிறது.
மகளிரணி போல் ஆடவர் அணியும் தங்கம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியாவுக்கு 10 தங்கம் உள்பட 62 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
India bowled out Sri Lanka for 45 runs and advanced to the final! A showdown with Pakistan awaits!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.