2-வது டி20: இலங்கைக்கு 216 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் - இலங்கை இடையேயான இரண்டாவது டி20 போட்டி ராவல்பிண்டியில் இன்று (அக்டோபர் 11) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி முதலில் விளையாடியது.
மாஸ் சதாகத் அதிரடி; இலங்கைக்கு 216 ரன்கள் இலக்கு!
Advertisement
Advertisement
முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாஸ் சதாகத் மற்றும் கேப்டன் ஷாகிப்ஸதா ஃபர்ஹான் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதிரடியாக விளையாடிய மாஸ் சதாகத் 51 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து 4 ரன்களில் சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் ஷாகிப்ஸதா ஃபர்ஹான் 44 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். ஃபகர் ஸமான் 22 ரன்கள், ஹாசன் நவாஸ் 19* ரன்கள் எடுத்தனர்.
இலங்கை தரப்பில் மஹீஷ் தீக்ஷனா, எஷான் மலிங்கா மற்றும் தாசுன் ஷானகா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி விளையாடி வருகிறது.
Batting first in the second T20 match against Sri Lanka, Pakistan scored 215 runs for the loss of 3 wickets.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.