முதல் டி20: இலங்கையை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் - இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி ராவல்பிண்டியில் இன்று (அக்டோபர் 9) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய லகிரு உதாரா 55 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கமிந்து மெண்டிஸ் 23 ரன்கள், தாசுன் ஷானகா 18 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
Advertisement
Advertisement
பாகிஸ்தான் தரப்பில் நஷீம் ஷா 3 விக்கெட்டுகளையும், முகமது இம்ரான் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ராஸவுல்லா, ஷதாப் கான் மற்றும் சைம் ஆயுப் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!
183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ஷாகிப்ஸதா ஃபர்ஹான் 89 ரன்கள், மாஸ் சதாகாத் 50 ரன்கள் எடுத்தனர். ஃபகர் ஸமான் 21 ரன்கள் எடுத்தார்.
இலங்கை தரப்பில் எஷான் மலிங்கா மற்றும் மஹீஷ் தீக்ஷனா தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். நுவான் துஷாரா மற்றும் துஷ்மந்தா சமீரா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Pakistan won the first T20 match against Sri Lanka by 4 wickets.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.