முதல் டெஸ்ட்: இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் 45 ரன்கள் முன்னிலை!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 45 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 45 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த நவம்பர் 9 ஆம் தேதி ராவல்பிண்டியில் தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 434 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 446 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், பாகிஸ்தானைக் காட்டிலும் இலங்கை அணி 12 ரன்கள் முன்னிலை பெற்றது.
Advertisement
Advertisement
இலங்கை அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய தனஞ்ஜெயா டி சில்வா மற்றும் கேப்டன் குசல் மெண்டிஸ் சதம் விளாசி அசத்தினர். தனஞ்ஜெயா டி சில்வா 167 ரன்களும், கேப்டன் குசல் மெண்டிஸ் 119 ரன்களும் எடுத்தனர். கமிந்து மெண்டிஸ் 58 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் தரப்பில் சாக்யூப் கான் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது அப்பாஸ் இரண்டு விக்கெட்டுகளையும், ரஸாவுல்லா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
45 ரன்கள் முன்னிலை!
இலங்கையைக் காட்டிலும் 12 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி, நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம், பாகிஸ்தான் அணி 45 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
அஸன் அவைஸ் 22 ரன்களுடனும், முகமது தாஹா 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தையப் ஆரிஃப் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.