அறிமுக டெஸ்ட்டில் அசத்திய சாகிப் கான்..! 320 ரன்கள் பின்னிலையில் இலங்கை!
இலங்கை - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவு குறித்து...
இலங்கை - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவுற்றுள்ளது. இதில் இலங்கை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது.
ராவல்பிண்டியில் நேற்று (நவ.9) தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 106.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளுக்கு 434 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
Advertisement
Advertisement
பாகிஸ்தானில் அதிகபட்சமாக சௌத் ஷகீல் 93 ரன்கள் எடுத்தார். இவருடன் சேர்ந்து மொத்தமாக ஐவர் அரைசதம் அடித்து அசத்தினார்கள்.
அடுத்ததாக தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய இலங்கை அணி இரண்டாம் நாள் முடிவில் 27.1 ஓவர்கள் முடிவில் 114/3 ரன்கள் எடுத்துள்ளது. வெளிச்சமின்மை காரணமாக இன்றைய நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந்தப் போட்டியில் இலங்கை சார்பில் லஹிரு உடாரா 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பசிந்து சூர்யபந்தரா டக் அவுட், தினேஷ் சண்டிமால் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்கள்.
அடுத்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸ், தனஞ்செய டி சில்வா சிறப்பாக விளையாடினார்கள். இதில் கமிந்து 40*, டி சில்வா 22* ரன்களுடன் இன்றைய ஆட்டத்தை முடித்தார்கள்.
பாகிஸ்தான் சார்பில் இன்றைய போட்டியில் அறிமுகமான சாகிப் கான் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். குறைவான வேகத்தில் வீசினாலும் பந்தை நன்றாக ஸ்விங் (திருப்பும்) திறமை கொண்டவராக கவனம் பெறுகிறார்.
இவருடன் சேர்ந்து முகமது அப்பாஸ் ஒரு விக்கெட் எடுத்தார். இலங்கை அணி 320 ரன்கள் பின்னிலையில் இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இலங்கை 7ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 9ஆவது இடத்திலும் இருக்கின்றன.