FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ராவல்பிண்டி டெஸ்ட்: ஐவர் அரைசதம்; 434 ரன்களுக்கு பாகிஸ்தான் டிக்ளேர்!

இலங்கை - பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி குறித்து...

பாகிஸ்தான் பேட்டர்கள் சௌத் ஷகீல் (வலது), காஜி கோரி. - AFP
பகிர்:

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 434 ரன்களுக்கு டிக்ளேர் செய்துள்ளது. இதில் ஐவர் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார்கள்.

பாகிஸ்தானுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி டி20 தொடரில் 1-2 என தோல்வியுற்றது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நவ.9ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

Advertisement

Advertisement

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 106.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளுக்கு 434 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக சௌத் ஷகீல் 93 ரன்கள் எடுத்தார். இவருடன் சேர்ந்து மொத்தமாக ஐவர் அரைசதம் அடித்து அசத்தினார்கள்.

டயாப் ஆரிஃப் 57, முகமது தாஹா 51, பாபர் அசாம் 50, அராஃபத் மின்ஹாஸ் 52 ரன்கள் எடுத்தார்கள். காஜி கோரி 48 ரன்கள் எடுத்து அரைசதத்தை தவறைவிட்டார்.

இலங்கை சார்பில் தில்ஷன் மதுஷனகா, அசிதா பெர்னாண்டோ தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்து பேட்டிங் செய்துவரும் இலங்கை அணி 12 ஓவர்களில் 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

summary

Pakistan vs Sri Lanka, 1st Test Saud Shakeel missing century, decare 434

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.