முத்தரப்பு ஒருநாள் தொடர்: அசத்தும் இலங்கை; தடுமாறும் பாகிஸ்தான்!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சில் அசத்தும் இலங்கை அணி குறித்து...
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீசி வருகிறது. 27 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 149/4 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக பாபர் அசாம் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் கேப்டனாக ஷஹீன்ஷா அஃப்ரிடி செயல்படுகிறார்.
பாகிஸ்தான் - இலங்கை - இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் சேர்ந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. இதன் முதல் போட்டி இன்று ராவல்பிண்டியில் தொடங்கியுள்ளது.
Advertisement
Advertisement
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் சார்பில் விளையாடிய தொடக்க வீரர்கள் சைம் ஆயுப், ஃபகர் ஸமான் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். பின்னர் பொறுப்புடன் விளையாடிய பாபர் அசாம் - சாத் பெயிஜ் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தார்கள்.
தற்போது, சல்மான் அகா, ஹாசன் நவாஸ் விளையாடி வருகிறார்கள். இலங்கை சார்பில் இஷான் மலிங்கா, தில்சன் மத்ஷனகா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்கள்.
Tri-nation ODI series: Sri Lanka impress; Pakistan falter!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.