இளம் வீரர்களுடன் சொந்த மண்ணில் ஆதிக்கம்: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற பாகிஸ்தான்!
பாகிஸ்தான் - இலங்கை இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி குறித்து...
பாகிஸ்தான் - இலங்கை இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நான்காம் நாளான இன்று (நவ.20) காலையே முடிவுக்கு வந்தது. ராவல்பிண்டியில் தொடங்கிய இந்தப் போட்டியில் பாகிஸ்தான் டாஸ் வென்று பந்துவீசியது.
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 98 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி 325 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.
இரண்டாம் இன்னிங்ஸில் இலங்கை அணி 316 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக மிலன் பிரியநாத் ரத்ன்நாயக 66 ரன்கள் எடுத்தார். மூவர் அரைசதம் அடித்தார்கள்.
Advertisement
Advertisement
பாகிஸ்தான் சார்பில் முகமது அப்பாஸ், ஆமிர் ஜமால் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இரண்டாம் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 13 ஓவர்களில் 90/2 ரன்கள் எடுத்து இலக்கைக் கடந்தது.
இரண்டாவது டெஸ்ட்டில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தல் அபார வெற்றியைப் பெற்ற பாகிஸ்தான் அணி, டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியது. டி20 தொடரிலும் பாகிஸ்தான் வென்றிருந்தது. இளம் வீரர்களுடன் களமிறங்கிய பாகிஸ்தான் டி20, டெஸ்ட்டில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுக்குச் சுற்றுப் பயணம் செய்த இலங்கை அணி டி20, டெஸ்ட் தொடர் என இரண்டையுமே இழந்துள்ளது கவனிக்கத்தக்கது. இதனால், இலங்கை அணியில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதென முன்னாள் வீரர்கள் கூறிவருகிறார்கள்.