FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பந்துவீச்சில் மிரட்டும் பாகிஸ்தான்: 36 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த இலங்கை!

இலங்கை - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து...

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ரஸாவுல்லா கொண்டாட்டம் - AP Photo/Anjum Naveed
பகிர்:

இலங்கை - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்துவரும் இலங்கை அணி 17.1 ஓவரில் 36 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இதில் ஐவருமே ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் லஹிரு உடாரா 4 ரன்கள், பசிந்து சூரியபந்தரா 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். டாப் ஆர்டர் பேட்டர்கள் தினேஷ் சண்டிமால் 7 ரன்கள், கமிந்து மெண்டிஸ் 8, தனஞ்செய டி சில்வா 1 ரன்னுக்கும் ஆட்டமிழந்தார்கள்.

பாகிஸ்தான் சார்பில் சாகிப் கான் முதல் விக்கெட்டையும் முகமது அப்பாஸ், ரஸாவுல்லா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். சொந்த மண்ணில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அசத்தி வருகிறார்கள்.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 2-1 என வென்ற பாகிஸ்தான் டெஸ்ட் தொடரையும் வெல்லும் முனைப்பில் இருக்கிறது. முதல் டெஸ்ட் சமனில் முடிந்ததால், கடைசி டெஸ்ட் போட்டியான இதில் வென்றாக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது.

தற்போது, இலங்கை அணி 22 ஓவர்களில் 63/5 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் குசல் மெண்டிஸ், சோனல் தினுஷா விளையாடி வருகிறார்கள்.

summary

Pakistan’s bowling proves lethal: Sri Lanka loses 5 wickets for 36 runs!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.