FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ராவல்பிண்டி டெஸ்ட்: பாகிஸ்தான் பந்துவீச்சு..! சாகிப் கான் நல்ல தொடக்கம்!

இலங்கை - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து...

28 வினாடிகள் முன்பு
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் சாகிப் கான் - AP Photo/Anjum Naveed
பகிர்:

இலங்கை - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (நவ.17) ராவல்பிண்டி கிரிக்கெட் திடலில் இந்திய நேரப்படி 10 மணிக்கு தொடங்கியது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. 7 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 8 ரன்கள் எடுத்துள்ளது.

Advertisement

Advertisement

பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி டி20 தொடரில் 1-2 என தோல்வியுற்றது. முதல் டெஸ்ட்டில் யாருக்கும் வெற்றி கிடைக்காமல் சமனில் முடிவடைந்தது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. களத்தில் லஹிரு உடாரா, தினேஷ் சண்டிமால் விளையாடி வருகிறார்கள்.

தொடக்க வீரர் பசிந்து சூரியபந்தரா 2 ரன்களில் ஆட்டமிழந்தார். முந்தைய போட்டியில் அறிமுகமாகி அசத்திய பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் சாகிப் கான் முதல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

சொந்த மண்ணில் பாகிஸ்தான் மீண்டும் வெற்றியைப் பெருமா என்ற எதிர்பார்ப்பில் அந்த நாட்டு மக்கள் காத்திருக்கிறார்கள். டி20 தொடரை இழந்தை இலங்கை டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் விளையாடி வருகிறார்கள்.

summary

Rawalpindi test no.2: Pakistan won the toss and opt to Bowl

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.