FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ராவல்பிண்டி டெஸ்ட்: 225* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தனஞ்சய டி சில்வா - குசல் மெண்டிஸ்!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அசத்திவரும் இலங்கை அணி குறித்து...

குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா - AP Photo/Anjum Naveed
பகிர்:

ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை அணி சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறது.

டாஸ் வென்ற இலங்கை பந்துவீச, பாகிஸ்தான் அணி 434/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அடுத்து விளையாடிய இலங்கை அணி இரண்டாம் நாளில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Advertisement

Advertisement

மூன்றாவது நாளில் இலங்கை அணி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது. தனஞ்சய டி சில்வா - குசல் மெண்டிஸ் இருவரும் இணைந்து 225க்கும் அதிகமான ரன்களை குவித்து விளையாடி வருகிறார்கள்.

தனஞ்சய டி சில்வா 152*, குசல் மெண்டிஸ் 109* ரன்களுடன் விளையாடி வருகிறார்கள். 94 ஓவர்களில் இலங்கை அணி 380/4 ரன்கள் குவித்து பாகிஸ்தானை விட 54 ரன்கள் மட்டுமே பின்னிலையில் இருக்கிறது.

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை பாகிஸ்தான் 2-1 என வென்றது. இதனைத் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் விளையாடி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இலங்கை 7ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 9ஆவது இடத்திலும் இருக்கின்றன. இரு அணிகளுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்பில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

summary

Rawalpindi Test: Dhananjaya de Silva and Kusal Mendis build a 200-run partnership!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.