FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இலங்கை டெஸ்ட் கேப்டனாக குசல் மெண்டிஸ் நியமனம்!

இலங்கை டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...

8 அக்டோபர் 2026, 5:46 pm IST
குசல் மெண்டிஸ் - IANS
பகிர்:

இலங்கை டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக 31 வயதான குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். காலையில் இந்தப் பொறுப்பில் இருந்து தனஞ்சய டி சில்வா விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வரும் நவம்பரில் தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து குசல் மெண்டிஸ் கேப்டனாக செயல்படுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

தனஞ்சய டி சில்வா 2024ல் கேப்டனாக நியமிக்கப்பட்டு, அவரது தலைமையில் இலங்கை அணி 18 டெஸ்ட்டில் 7 வெற்றிகள், 8 தோல்விகள், 3 சமனில் முடிந்துள்ளன. கடைசியாக இந்தியாவுடன் 0-1 என தோல்வியுற்றது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், குசல் மெண்டிஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வந்த இவருக்கு டெஸ்ட்டில் முதல்முறையாக செயல்படவிருக்கிறார்.

ஒருநாள் போட்டிகளில் 22 போட்டிகளில் கேப்டனாக இருந்து குசல் மெண்டிஸ் 10 தோல்வி, 10 வெற்றிகளையும் பெற்றுள்ளார். மொத்தமாக டெஸ்ட்டில் 75 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 4,836 ரன்கள் எடுத்துள்ளார்.

இலங்கையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 12ஆவது அதிகபட்ச ரன்கள் குவித்தவராக இருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிரண்டு இடத்துக்கான வாய்ப்பை இழந்துவிட்ட இலங்கை அணி அடுத்த சுற்றிலாவது முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

summary

Kusal Mendis appointed Sri Lanka Test captain after Dhananjaya de Silva steps down

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments