98 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை..! அதிரடி காட்டும் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் - இலங்கை இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி குறித்து...
பாகிஸ்தான் - இலங்கை இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இலங்கை அணி 35.3 ஓவர்களில் 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக இந்த அணியில் குசல் மெண்டிஸ் 32 ரன்கள் எடுத்தார்.
Advertisement
Advertisement
பாகிஸ்தான் சார்பில் பந்திவீச்சில் முகமது அப்பாஸ், ரஸாவுல்லா, ஆமிர் ஜமால் தலா 3 விக்கெட்டுகளும் சாகிப் கான் ஒரு விக்கெட்டும் எடுத்தார்கள்.
குசல் மெண்டிஸ், சோனல் தினுஷா தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்கள். தற்போது பாகிஸ்தான் 15 ஓவர்களில் 58/0 ரன்கள் எடுத்து, அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறது.
முதல் டெஸ்ட் சமனில் முடிந்தது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட்டில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 45 ரன்கள் பின்னிலையில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.
முன்னதாக, டி20 தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என வென்றது. டி20 தொடரை இலங்கை அணி டெஸ்ட் தொடரில் வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்பு மங்கிவிட்டது. வெற்றி பெறாவிட்டாலும் சமனில் போராடுமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.