FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உஸ்மான் கான் சதம்: இந்தியாவின் வெற்றிக்கு 338 ரன்களை இலக்காக நிர்ணயித்த பாகிஸ்தான்!

யு19 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் மோதிய இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் குறித்து...

55 வினாடிகள் முன்பு
யு19 பாகிஸ்தான் வீரர்கள். - படம்: எக்ஸ் / ஏசியன் கிரிக்கெட் கவுன்சில்
பகிர்:

யு19 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் ஓமனில் அல் அமீரட் திடலில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 337 ரன்கள் குவித்துள்ளது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கான் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மூன்றாம் இடத்தில் களமிறங்கிய அப்துல் காதிர் 80 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.

பாகிஸ்தான் கேப்டன் ஃபர்ஹான் யூசப் 63 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் காவ்யா படேல் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். சிகுருபதி வெங்கடா 3 விக்கெட்டுகளும் அர்ஜுன் ராஜ்புத் 1 விக்கெட்டும் எடுத்தார்கள்.

அன்வி திராவிட் ஒரு ரன் அவுட் செய்து அசத்தினார். 338 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கும் இந்தியாவின் தொடக்க வீரர் சேவாக்கின் மகன் இந்தப் போட்டியில் அசத்துவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அரையிறுதிக்கு முந்தைய போட்டியில் ஆர்யவீர் சேவாக் 160 ரன்கள் குவித்து அசத்தினார். அரையிறுதியில் அரைசதம் அடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

summary

U19 Asia Cup 2026 Finals, Pakistan set a target 338 runs for Team India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.