FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆசிய கோப்பை: அரையிறுதியில் இந்தியா அபார வெற்றி; இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோதல்!

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணி வீரர்கள் - படம் | பிசிசிஐ
பகிர்:

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமனில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

Advertisement

Advertisement

முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் நோமன் சலார்ஸாய் மற்றும் ஷா ஃபைசல் ரஹீமி தலா 51 ரன்கள் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, கேப்டன் ஷோஹைல் கான் 36 ரன்கள், ஷுபன் ஸாகைல் 31 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

இந்தியா தரப்பில் இஷான் ஷூட் 3 விக்கெட்டுகளையும், ஆர்யன் சாவ்சனி இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். காவ்யா படேல், யஷ்பத்ரன் சௌகான் மற்றும் அர்ஜூன் ராஜ்புட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

கேப்டன் லக்‌ஷயா ராஜேஷ் அசத்தல்; இறுதிப்போட்டியில் இந்தியா!

228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 36.5 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் லக்‌ஷயா ராஜேஷ் ராய்சந்தனி மற்றும் ஆர்யவீர் சேவாக் களமிறங்கினர். இந்த இணை அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 117 ரன்கள் சேர்த்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்யவீர் சேவாக் 57 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பின், விகே வினீத் 62 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்‌ஷயா ராஜேஷ் ராய்சந்தனி 90 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து 7 ரன்களில் சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். யஷ்பர்தன் சௌகான் 16 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் லக்‌ஷயா ராஜேஷ் ராய்சந்தனிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இறுதிப்போட்டி நாளை மறுநாள் (நவம்பர் 14) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The Indian team advanced to the final of the Under-19 Asia Cup cricket tournament after defeating Afghanistan in the second semi-final.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.