FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆட்ட நாயகன் ஆர்யவீர் சேவாக்: யு19 ஆசிய கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா!

யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி குறித்து...

ஆட்ட நாயகன் ஆர்யவீர் சேவாக்; அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா. - படங்கள்: பிசிசிஐ, தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ்
பகிர்:

ஓமன் நாட்டில் நடைபெற்று வரும் 19 வயதுக்குள்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகம் (யுஎஇ) உடன் மோதியது. இதில் டாஸ் வென்ற யுஎஇ பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 309/7 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக முன்னாள் வீரர் சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் 160 ரன்கள் குவித்து அசத்தினார்.

யுஎஇ சார்பில் பந்துவீச்சில் நஷீம் கான் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து பேட்டிங் செய்த இந்த அணி 50 ஓவர்களில் 239 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்த அணியில் அஹ்மத் குதாடாத் 70 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் இஷான் சூத் 4 விக்கெட்டுகளும் மற்ற அறுவர்களால் தலா ஒரு விக்கெட்டும் எடுத்து அசத்தினார்கள்.

ஆட்ட நாயகனாக ஆர்யவீர் சேவாக் தேர்வானார். அரையிறுதியில் இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் நவ.12ஆம் தேதி அல் அமீரத் முதல் திடலில் இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு விளையாடுகிறது.

மற்றுமொரு அரையிறுதியில் பாகிஸ்தானும் வங்கதேசமும் நவ.12ஆம் தேதி அல் அமீரத் இரண்டாவது திடலில் இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு விளையாடுகிறது.

summary

Player of the Match Aryavir Sehwag: India advances to the semi-finals of the U19 Asia Cup!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.