45 வயதில் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடும் ஜேம்ஸ் ஆண்டர்சன்!
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் கவுன்ட்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடவுள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் - படம் | சர்ரே கிரிக்கெட் (எக்ஸ்)
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் கவுன்ட்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடவுள்ளார்.
இங்கிலாந்து அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஜேம்ஸ் ஆண்டர்சன் கடந்த 2024 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமை ஆண்டர்சனையேச் சேரும்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற ஜேம்ஸ் ஆண்டர்சன், 25 ஆண்டுகளாக லங்காஷையர் அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியுள்ளார். லங்காஷையர் அணியுடனான அவரது 25 ஆண்டுகால கிரிக்கெட் பயணம் அண்மையில் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாட ஜேம்ஸ் ஆண்டர்சனை சர்ரே அணி ஒப்பந்தம் செய்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
Sir James Anderson signs for Surrey in the 2027 season to play County Championship cricket. ð
— Surrey Cricket (@surreycricket) November 12, 2026
ð¤ | #SurreyCricket pic.twitter.com/n7RlAreFie
சர்ரே அணிக்காக விளையாடவுள்ளது குறித்து ஆண்டர்சன் பேசியதாவது: கிரிக்கெட்டுக்கு இன்னும் நிறைய விஷயங்களை என்னால் கொடுக்க முடியும் என உணர்கிறேன். அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு ஆடுகளத்துக்கு உள்ளேயும், வெளியேயும் என்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டு அவர்களுக்கு உதவ முடியும் என்றார்.
சர்ரே அணியின் இயக்குநர் அலெக் ஸ்டீவர்ட் பேசியதாவது: கடந்த கவுன்ட்டி சீசனில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 50-க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி, அவர் இன்னும் முன்னணி பந்துவீச்சாளராக உள்ளார் என்பதை நிரூபித்துள்ளார். அவர் சர்ரே அணிக்காக விளையாடவுள்ளது அணியில் உள்ள இளம் வீரர்கள் நிறைய விஷயங்களை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள உதவியாக இருக்கும் என்றார்.
2027 ஆம் ஆண்டு கவுன்ட்டி சீசனின்போது, ஜேம்ஸ் ஆண்டர்சன் அவரது 45-வது வயதில் அடியெடுத்து வைத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Former England player James Anderson is set to play for Surrey in county cricket.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


